முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு விசாரனைக்காக சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைச் சார்ந்த நபரை அரை நிர்வாணமாக நடத்திய விவகாரத்தில்
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அவரது ஜாமின் மனு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணையும் நடைபெற்றது.
இதனையடுத்து,ஜெயக்குமார் அவர்களை மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.