மீண்டும் ஆட்சி அமைய வேண்டி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும் என, அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்தவர்கள், ஜெ., நினைவிடத்தில், தியானத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம் இரவு வெளியாயின. பெரும்பாலான கருத்து கணிப்புகளில், 160 - 170 இடங்களில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன் தலைமையில் எட்டு பேர், சென்னை மெரினாவில் உள்ள, ஜெ., நினைவிடத்திற்கு வந்தனர்.மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும் என, தியானத்தில் ஈடுபட்டனர். 'எங்கள் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும்; மீண்டும் ஜெ., ஆட்சி அமையும்' என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.