அதிமுக பொதுக்குழு - அரசிற்கு எதிராக கவனமிற்கும் முக்கிய தீர்மானங்கள்..!

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Karthick Dec 26, 2023 06:37 AM GMT
Report

இன்று சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

அதிமுக பொதுக்குழு

இன்று சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய தீர்மானமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

கழக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம்.

மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும் பாராட்டு 

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்னே திட்டமிடாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

admk-meeting-today-results

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் பேச்சை ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம்.

திமுகவால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள திமுக அரசிற்கு வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கு கடும் கண்டனம்

ஊழல் ஆட்சியை நடத்தும் பொம்மை முதல்வருக்கு கடும் கண்டனம் 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசுக்கு வலியுறுத்தல்

மக்களவையில் பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது, ஜனநாயக ,அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த கோரிக்கை

ஈழதமிழர்களின் நலன் காக்க, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமைவழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம்

நெசவுத்தொழிலையும், நெசவுத்தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்க தவறிய திமுக அரசிற்கு கண்டனம்

admk-meeting-today-results

அரசின் பட்டியலின ,மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம் அவசர கதியில் பொதுப்பாட திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் விடியா திமுக அரசிற்கு கண்டனம்.

தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தம் தேவை

சமூக நீதியை குழிதோண்டி புதைத்து சமூக நீதிக்கு எதிராக அரசின் மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம்.

தமிழகத்திற்கு ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுகவின் சந்தர்ப்பவாத மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம்.

நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் என கூறி மக்களை ஏமாற்றிய திமுக அரசின் முதல்வருக்கு கண்டனம்.

admk-meeting-today-results

அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கியதோடு, சொத்து வரி, வீட்டு வரியை உயர்த்திய திமுக அரசிற்கு கண்டனம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க எதுவாக குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் தயார்படுத்த வேண்டும்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்காத மக்கள் விரோத அரசிற்கு கண்டனம்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் வகையில் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றவேண்டும்.