இலவச குளிர்சாதனப்பெட்டி- தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

ADMK Edappadi K. Palaniswami Election
By Fathima Mar 24, 2026 12:13 PM GMT
Report

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

*மகளிர்க்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை

*குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்.

*ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி

*5 லட்சம் மகளிர்க்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 வழங்கப்படும்.

*முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

*வீடற்ற குடும்பங்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

*ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

*வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

*பெண்களை போல் ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

*இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும்.