வெரைட்டி ரைஸ் to தேவா கச்சேரி வரை...களைகட்ட போகும் அதிமுக மாநாடு

ADMK Madurai Edappadi K. Palaniswami
By Karthick Aug 18, 2023 12:53 PM GMT
Report

மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை அதிமுக சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாநில மாநாடு 

admk-manaadu-arrangements

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்று கொண்ட பின், நடைபெறும் முதல் மாநில மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெறவுள்ளது. எடப்பாடி தலைமையில் நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் மாநாட்டில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெரைட்டி ரைஸ் 

மாநாட்டில் அதிகமானோர் பங்கெடுத்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,வரும் அனைவருக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கேட்டரிங் எனப்படும் தனியார் கேட்டரிங் நிறுவனத்திடம் உணவு தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

admk-manaadu-arrangements

இந்த மாநாட்டிற்கான மெனுவில் தயிர் சாதம், பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டி வெரைட்டியாக உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இன்னிசை கச்சேரிகள்

அதே போல, தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் முன்னரே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டது போல, மதுரை முத்துவின் stand up காமெடி நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

admk-manaadu-arrangements

தடபுடலாக அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில், இந்த மாநாடு நடைபெறும் வேண்டும் என அதிமுக தரப்பினர் முயன்று வருகின்றனர் என்பதில் மாற்று கருத்தில்லை.