நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூக தீர்வு ஏற்படவில்லை.
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களிலும், சிதம்பரம் நகராட்சியிலும் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.