இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தாராபுரத்தில் அதிமுக முன்னிலை, மதுராந்தகத்தில் தவெக

ADMK DMK Election Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 09, 2026 05:06 AM GMT
Report

by election vote counting admk leading dharapuram, tvk leading in madurantakam: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தாராபுரத்தில் அதிமுகவும், மதுராந்தகத்தில் தவெகவும் முன்னிலை வகிக்கிறது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதன் காரணமாக கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்நிலையில், 2 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தாராபுரத்தில் அதிமுக முன்னிலை

தாராபுரத்தில் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் 10,829 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். 

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தாராபுரத்தில் அதிமுக முன்னிலை, மதுராந்தகத்தில் தவெக | Admk Leading Dharapuram Tvk In Madurantakam

தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,887 வாக்குகளுடன் 2வது இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா 8,974 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா 693 வாக்குகளுடன் 4வது இடத்திலும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 235 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

மதுராந்தகத்தில் தவெக முன்னிலை

மதுராந்தகத்தில் 4 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 20,189 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். 

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தாராபுரத்தில் அதிமுக முன்னிலை, மதுராந்தகத்தில் தவெக | Admk Leading Dharapuram Tvk In Madurantakam

திமுக வேட்பாளர் பரந்தாமன்13,872 வாக்குகளுடன் 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 11,589 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகிராமன் 154 வாக்குகளுடன் 4வது இடத்திலும், சிபிஎம் வேட்பாளர் சுகந்தி 70 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.