இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை - உடற்கூராய்வில் அதிர்ச்சி!

Attempted Murder Relationship Crime Salem
By Sumathi Dec 10, 2025 07:46 AM GMT
Report

அதிமுக பிரமுகரின் மகள் கொலை சம்பவம் திருப்பம் கண்டுள்ளது.

தகாத உறவு 

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர்.

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை - உடற்கூராய்வில் அதிர்ச்சி! | Admk Leaders Daughter Murdered Salem

பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர் நகரில் டியூசன் சென்டரில் பணியாற்றி வந்ததால், அங்கேயே தங்கி வந்துள்ளார். அப்போது நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண் என்பவர் பாரதியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ-வாக பணியாற்றி வருகிறார்.

உதயசரணுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும் உதயசரனும் சென்று, பின் பாரதி தங்கி இருந்த அறைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து பாரதி மயங்கி விட்டதாகக் கூறி அவரைத் தூக்கிக் கொண்டு தான் வேலை பார்த்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

தகாத உறவு - மனைவியைக் கொடூரமாக கொன்று செல்பி எடுத்த கணவர்!

தகாத உறவு - மனைவியைக் கொடூரமாக கொன்று செல்பி எடுத்த கணவர்!

விசாரணையில் திடுக் 

அங்கு சோதித்ததில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின் உடற்கூராய்வு அறிக்கையில் மூக்கில் ரத்தம் வழிந்திருப்பதும், நெஞ்சுப் பகுதியில் வீக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என உடற்கூராய்வில் முடிவு செய்யப்பட்டது.

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை - உடற்கூராய்வில் அதிர்ச்சி! | Admk Leaders Daughter Murdered Salem

இதனையடுத்து உதயசரணை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், உதயசரண் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். பாரதி மது, சிகரெட் பழக்கம் உள்ளவர் எனக் கூறப்படுகிறது.

இதனால் நெருங்கிப் பழகினாலும் திருமணம் செய்து கொள்ள உதயசரண் சம்மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் பாரதியை உதயசரண் அடித்துகொன்றுள்ளார்.