அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மதுசூதனன். 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் முக்கியமானவர் மதுசூதனன்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை
அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அப்பல்லோ மருத்துவமனை சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.