"உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து எனக்கு இரவு தூக்கமே வரல... - ஈபிஎஸ் பேட்டி...!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து எனக்கு இரவு தூக்கமே வரலவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவையும் உறுதி செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது.
தீர்ப்பு நினைத்து தூக்கமே வரவில்லை....
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து நேற்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று நான் பயந்துக்கொண்டே இருந்தேன். அம்மா கோயிலில் மா அணிவித்து நன்றாக வேண்டிக்கொண்டேன். இரு தலைவர்களின் அருளால் அடுத்த சில நிமிடங்களிலேயே எனக்கு நல்ல செய்தி வந்தது. தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது நெகிழ்ச்சியோடு பேசினார்.