திமுக கூட்டணியில் இருக்க திருமாவளவனுக்கு விருப்பமே இல்லை : ஜெயக்குமார் கருத்து

Thol. Thirumavalavan
By Irumporai May 19, 2023 04:47 AM GMT
Report

திமுக கூட்டணியில் நீடிக்க திருமாவளவனுக்கு விருப்பமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மே தினத்தை ஒட்டி அண்ணா தொழிற்சங்கம் சார்பாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல உதவி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 314 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சத்திற்கான குடும்ப நல நிதியை வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர்

திமுகவின் பி டீமாக

வைத்திலிங்கம் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது காசு வாங்கிவிட்டு ஒப்புதல் வழங்கிய ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதால் அதிலிருந்து தப்பிக்கவே திமுகவின் பி டீமாக மாறி இருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருக்க திருமாவளவனுக்கு விருப்பமே இல்லை : ஜெயக்குமார் கருத்து | Admk Jayakumar Press Meet Thirumavalavan Dmk

மூப்பனாரை பின்னுக்கு தள்ளி, தஞ்சாவூரில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வைத்திலிங்கம் வைத்திருக்கிறார் சாலை விபத்து, நீரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுக்கும் அரசு, கள்ளச்சாராயம் கொடுத்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறது என்றார். 

 திருமாவுக்கு விருப்பம் இல்லை

கர்நாடகாவில் பாஜக தோல்வியால் அதன் கூட்டணியில் உள்ள அதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்த கேள்விக்கு பதிலளிக்கையில், திமுக கூட்டணியில் நீடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு விருப்பமில்லை எனவும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.