பொன்முடி வழக்கு - ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Tamil nadu K. Ponmudy D. Jayakumar
By Jiyath Jan 23, 2024 07:36 AM GMT
Report

பொன்முடி வழக்கில் தன்னை இணைக்க கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பொன்முடி வழக்கு - ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! | Admk Jayakumar Plea Dismissed By The Court

அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி 

அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என ஜெயக்குமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

பொன்முடி வழக்கு - ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! | Admk Jayakumar Plea Dismissed By The Court

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.