தில்லு இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வா பாக்கலாம் - திமுகவிற்கு சவால் விடும் ஜெயக்குமார்..!
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவிற்கு நேரடியாக சவால் விட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
எண்ணூர் வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவிற்கு அதிரடியாக பல சவால்களை விடுத்தார்.
அவர் பேசும் போது, தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட துணிவு உள்ளதா? எனக் கேள்வியெழுப்பி கடந்த காலங்களில் திமுக தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட வரலாறு உண்டா? என்றும் வினவினார்.
வனவாசம் தான்...
திமுக என்ன தோல்வியே சந்திக்காத கட்சியா? என்றும் கேள்விகளை முன்வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார், ஆண்மை தைரியம், திராணி இருந்தால் திமுக ஒத்தைக்கு ஒத்த நிற்க முடியுமா என ஆவேசமாக வினவினார்.
கூட்டணியாகவோ, தனியாகவோ மீண்டும் தாங்கள் 40 இலக்கை அடைவோம் என உறுதிபட தெரிவித்த அவர் 2026-ஆம் தேர்தலை அடுத்து நிரந்தரமாக திமுக வனவாசம் செல்லும் என அதிரடியாக தெரிவித்தார்.