கர்நாடக தேர்தலில் அதிரடி - பாஜகவை எதிர்த்து களமிறங்கும் அதிமுக!
கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக தேர்தல்
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தி, வேட்பாளரை அறிவித்தார்.

அதன்படி, பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் இந்த தொகுதியில் அன்பரசன்
அதிமுக போட்டி
கடந்த 2008 மற்றும் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகளை பெற்றார். அதே தொகுதியில் பாஜகவின் சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் அங்கு அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan