இங்க எதுவும் சரியில்லை பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் : ஆவேசமான அண்ணாமலை

BJP K. Annamalai
By Irumporai Mar 18, 2023 03:51 AM GMT
Report

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியினை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னை அமைந்த கரையில் நடைபெற்றது  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாஜக் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கூட்டணி வேண்டாம் 

அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.

இங்க எதுவும் சரியில்லை பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் : ஆவேசமான அண்ணாமலை | Admk I Will Resign From Alliance With Annamalai

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் இருப்பேன் என்று கூறினார். அப்போது பாஜக மாநிலத்துணை தலைவர் நாராயணன் குறுக்கிட்டு அண்ணாமலை பேச்சு தெளிவாக இல்லை விளக்கம் கூறுங்கள் என்று கூற பாஜக மாநில கூட்டத்தில் பரபரப்பு நிலவியது

பரபரப்பில் பாஜக

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்து தெரிவித்தார்