கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - அதிமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை திமுக அரசு தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்திட்டத்திற்கு, மூடு விழா நடத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்து, திண்டிவனத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது
இந்நிலையில், விழுப்புரம், திண்டிவனம், காந்தி சிலை அருகில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இந்த உண்ணாரவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏராளமான அதிமுகவினர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
