இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு தொடக்கம்: அதிமுகவினர் கொண்டாட்டம்

celebration All India Anna Dravida Munnetra Kazhagam golden jubliee
By Anupriyamkumaresan Oct 17, 2021 04:53 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

அதிமுக தொடங்கப்பட்டதன் பொன்விழா ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், 1972 ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவைத் தொடங்கினார்.

அதன் பொன்விழா ஆண்டு தொடக்க தின விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு தொடக்கம்: அதிமுகவினர் கொண்டாட்டம் | Admk Golden Jubilee Celebration Starts Today

அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கவுள்ளனர்.

அதிமுக பொன்விழா ஆண்டு மலரையும் அவர்கள் வெளியிடவுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.