அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் : நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு
அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனுஅளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர்
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இந்த விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

இபிஎஸ் மனு
இதனையடுத்து, இந்த விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. எனவே, வரும் 12-ஆம் தேதி புதன்கிழமை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள மனு விசாரணை செய்யப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் எதிரான ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.