ஒரு மணி நேரம் வாய்ப்பு : அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இபிஎஸ் தொடங்கிய மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
ஓபிஎஸ் வழக்கு
அதிமுக பொதுக்குழு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 23ஆம் தேதியன்று இருந்த நிலையே தொடர வேண்டுமென தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேவியட் மனு
எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு தனது தரப்பு வாதங்களை கேட்ட பிறகு எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு கிடைக்காத காரணத்தால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் அவகாசம்
இதனையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை இன்றை தினம் ஒத்திவைத்துள்ளார். இன்று நடைபெறவுள்ள விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கு வாதம் செய்ய ஒரு மணி நேரம் நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளதாகவும், வாதத்தை கூடுதல் நேரங்களும் ஒதுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் நடைபெறவுள்ள வாதம் இறுதி வாதமாக கூட இருக்கலாம் என தெரிவித்தனர்.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan