அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கு
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன் ஓபிஎஸ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், அதிமுக பொது குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்றும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இந்த சூழலில் கடந்த 12ஆம் தேதி இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்று மீண்டும் விசாரணை
அப்போது வழக்கு நிலுவையில் இருப்பதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் வாதிட, ஈபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

இருப்பினும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் அலுவல் நேரம் முடிவடைந்ததால் வழக்கு விசாரணை 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. விசாரணையின் முடிவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: சுக்கிர புத்திரர்களான ரிஷப ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது? Manithan
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan