அதிமுக கொடியில் 'சின்னம்மா' வருக! வருக!- சசிகலா ஆதரவாளர்கள் அமோக வரவேற்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையானார். இதனையடுத்து, அவர் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்துகொண்டிருக்கிறார். அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
அது தொடர்பாக போலீசில் புகாரும் கொடுத்தனர். இதையடுத்து கர்நாடகாவிவிலிருந்து தமிழகம் திரும்பும் அவருக்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இதனிடையே சசிகலா வந்த காரில் இருக்கும் கொடியை அகற்ற வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து சசிகலா தமிழக எல்லையில் அதிமுகவை சேர்ந்தவரின் காரில் மாறி, அதிமுக கொடி பறக்கவிட்ட காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே அதிமுக கொடியில் 'சின்னம்மா வருக! வருக! என்ற வாசகத்தை எழுதி சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.