புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் - விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு!

M. K. Stalin Tamil nadu ADMK DMK
By Vinothini Jul 25, 2023 04:54 AM GMT
Report

தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக அதனை விசாரிக்க கோரி மனு அளித்துள்ளனர்.

புதிய தலைமை செயலகம்

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி நடந்தது, அப்பொழுது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்டது.

admk-filed-petition-new-secretarait-construction

அதன்பின்னர் அதிமுக அரசு வந்தது, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. அதன்பிறகு இதனை எதிர்த்து முன்னாள் முதலாமைச்சர் கருணாநிதி அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தது.

அதிமுக மனு

இந்நிலையில், இந்த விவகாரம் குன்றிது விசாரணை நடத்த 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

admk-filed-petition-new-secretarait-construction

தற்பொழுது அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், புதிய தலைமை செயலகம் கட்டியத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக மனு அளித்துள்ளார். அதில் அவர், "புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித் துறைக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறை காட்டவில்லை. எனவே, 2018-ம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான, மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.