"அதிமுக இயக்கம் எழுந்து நிற்கும்" - காமராஜ் பேச்சு
இந்த இயக்கம் தோற்றதாக வரலாறு கிடையாது நாளை எழுந்து நிற்கும்.." நன்னிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 74- வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசும்போது,
"எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்கம் அதிமுக. கட்சியை 25 ஆண்டுகள் கட்டிக்காத்த தலைவி நமது அம்மா. நாளை ஆளும் கட்சி அதிமுக தான்.வரும் காலம் எல்லாம் அதிமுக காலமாகத்தான் இருக்கும்.
இந்த இயக்கம் தோற்றதாக வரலாறு கிடையாது. நாளை எழுந்து நிற்கும் என பேசினார். பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கோபால், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.பி.ஜி அன்பு,
நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பேரூர் கழக செயலாளர் செல். சரவணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.