அரசியலை விட்டே போயிடுறேன்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொகுதி மாற இருப்பதாகவும், வரும் தேர்தலில் அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டி போட போவதாகவும் தகவல் வெளியாகிய நிலையில்,ஜெயக்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் ஆதங்கம்
குறித்த பொதுக்கூட்டத்தில் ஜெயக்குமார் மேலும் குறிப்பிடுகையில், 2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற வைத்த நீங்கள் 2021-ம் ஆண்டு தேர்தலில் இப்படி கைவிட்டுடீங்களே?

நான் என்ன தப்பு செய்தேன் என கேள்வி எழுப்பியதுடன், ஊரை அடித்து உலையில் போட்டேனா?, கட்ட பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனே, இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணி ரவுடித்தனம் பண்ணேனே? சொல்லுங்க பார்க்கலாம் அப்படி இருந்தா அரசியலை விட்டு போய்விடுகிறேன் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மாதிரி என்றைக்கும் அ.தி.மு.க. வும் இல்லை, ஜெயக்குமாரும் கிடையாது. உங்களையே சுத்தி சுத்தி வந்தனேன்.

இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
நான் பொதுச்செயலாளர் கிட்ட கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லன்னா சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போய் நிற்பேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் அத ராயபுரம் தான் என குறிப்பிட்டுள்ளார்.