ஓபிஎஸ் மற்றும் டிடிவி எனும் ரெண்டு அமாவாசையும் ஒன்று சேர்ந்தால், தமிழகம் இருட்டாகிவிடும் : ஜெயக்குமார் விமர்சனம்
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-ஐ கழற்றிவிடுவார்
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார் , ஓபிஎஸ் முதலில் யாருக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கி, அவர்களை மாஃபியா கும்பல், தமிழ்நாட்டை சூறையாடிய குடும்பம் என கடுமையான விமர்சித்தார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி எனும் ரெண்டு அமாவாசையும் ஒன்று சேர்ந்தால், ஒட்டுமொத்த தமிழகமும் இருட்டாகிவிடும். டிடிவி-யே சில காலங்களில் ஓபிஎஸ்-ஐ கழற்றிவிடுவார். என்றார்.