மின் கட்டண உயர்வை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ஜெயக்குமார்
மின் கட்டண உயர்வை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு சொந்தமான வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு. தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை, என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர், இவருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து பேசுகையில், முதலமைச்சர் காவல்துறை தனது கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார்.
எதிர்க்கட்சிகளை செயல்படாமல் தடுக்க நினைக்கின்றனர். காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின் கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடத்தப்படுவதாக தெரிவித்தார்.