கொரோனா நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி:

அரசின் முன்னோடித் திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற உறுதி அளித்தார்கள். ஆனால் இப்போது அதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறார்கள்.
நீட் தேர்வு ரத்து குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை விவசாயிகளின் பயிர்க் கடன்களை ரத்து செய்த ரசீது இன்னும் விவசாயிகளுக்கு இந்த அரசு வழங்கவில்லை மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர், அது குறித்தும் ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்,முதியோர் உதவி தொகை 1500 ரூபாய் என எனது தேர்தல் வாக்குறுதி எதுவும் ஆளுநர் உரையில் இல்லை
ஆளுநர் உரை ஏமாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
சரியாக கையாள தவறியதால் கொரோனா நோய் தோற்று படிப்படியாக குறைந்து வருகிறதே தவிர முழுமையாக கட்டுக்குள் வரவில்லை
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அரசு மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த போது நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை ஆனால் அன்றைய தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என வந்தது. தமிழகத்தில் கொரோனா- ஆர்டிபிசிஆர் பரிசோதனை குளறுபடியாக உள்ளது