அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
EPS
Meeting
Admk
By Thahir
அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு பற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான மனு அளித்துள்ளார்.
இந்தநிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி சென்னை கலைவாணர் அரங்கின் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே கோடநாடு விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது இன்றே விவாதிக்க பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார்.