அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம் - சூடு பிடிக்கும் தேர்தல் களம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு குறித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாதத்தின் இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக மிகத் தீவிரமாக பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
ஆனால் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது வரை தொடங்கவில்லை. இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 முதல் அதிமுக அலுவலகத்தில் பெற்றுக்க்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் போட்டியிட விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக தமிழகத்திற்கு ரூ.15,000, புதுச்சேரி ரூ.5,000 மற்றும் கேரளாவுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.