முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: சீமான், தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

admk-election-dmk-tamilnadu-semman
By Jon Jan 09, 2021 11:58 AM GMT
Report

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு சீமான், தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ள இலங்கை இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல, சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோர சம்பவம், வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

அன்றைக்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இன்றைக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுவிடம் அழிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ள சீமான், இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே என்று தெரிவித்தார்.