ரஜினி தனது அறிவிப்பை வாபஸ் பெற்று அரசியலுக்கு வரவேண்டும் - சென்னையில் ரசிகர்கள் போராட்டம் நடத்த திட்டம்
ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர அவரது ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாத இறுதியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். அதற்கான எல்லா பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு செயல்பட்டார்.
ஆனால் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதனால், அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
ரஜினிகாந்தின் இந்த திடீர் அறிவிப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றனர். ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையே கொடுத்தது.
இதனால் ரஜினி தனது அறிவிப்பை வாபஸ் பெற்று அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஜனவரி 10ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.