கோகுல இந்திராவுக்கு கண்டனம் விடுத்த அமைச்சர் ஜெயக்குமார்
கோகுல இந்திராவின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது நெருங்கிய தோழியான சசிகலா அவர்களைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் கோகுல இடற கண்டனம் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதை ஏற்க முடியாது.
சசிகலா வருகை அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அமமுகவினருடன் நமக்கு எந்த உறவும் கிடையாது. அதிமுக அமமுக தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஏற்க முடியாது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.