தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி - ஸ்டாலின் அறிவிப்பு

stalin dmk admk
By Jon Jan 13, 2021 11:28 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பத்து ஆண்டு கால ஆட்சியை தக்கவைக்க அதிமுக முயன்று வருகிறது.

அதே சமயம் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் திமுக தீவிரமாக உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்குள் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.