தமிழகத்தின் முக்கிய தொகுதியில் போட்டியிடும் நடிகை கௌதமி?
வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்துாரில் பாஜக சார்பில் நடந்த நம்ம ஊர் பொங்கல் விழாவில், சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்து கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும்.
அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும், ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அனைத்தும் ஒன்றாகிவிடும். தேர்தலில் தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ரஜினி தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் தொகுதியில் கௌதமி போட்டியிட முடிவு செய்துள்ளதாலேயே பொங்கல் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.