ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ள இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்
ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளதாக துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியின் நிறுவனரான டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களது 104வது பிறந்தநாள் வருகிற ஜனவரி 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவுகளை எப்போதும் நெஞ்சில் சுமந்து உள்ள மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூராட்சி ,கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள் அனைவரும், எம்ஜிஆர் திருவுருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு
கழக நிறுவனத் தலைவர் "பாரத ரத்னா இதயதெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்" அவர்களின் 104-வது பிறந்த நாள் விழா!!#AIADMK #MGR PIC.TWITTER.COM/TFGEM534PK
— O Panneerselvam (@OfficeOfOPS) January 11, 2021