தொகுதி பங்கீட்டில் உறுதியாக உள்ள தேமுதிக: சம்மதிக்குமா அதிமுக?

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 11, 2021 11:22 AM GMT
Report

தொகுதி பங்கீட்டில் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில். தேர்தல் ஆணையம் இன்னும் தேதிகளை அறிவிக்கவில்லை .

மேலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் .

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி, தேமுதிக அங்கம் வகிக்கும் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம், தொடர்ந்து அந்த கட்சி ஆட்சி செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். ஆனால் 41 தொகுதிகளை அதிமுக தருமா என்பது சந்தேகம் தான். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து தெரியவரும்.