தேசிய கட்சிகள் இல்லாமல் எந்த கட்சியும்இயங்க முடியாது – இசையமைப்பாளர் கங்கை அமரன்
தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது என பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை கலந்துகொண்ட கங்கை அமரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர் கங்கை அமரன், தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்கும் நிலை உள்ளதக கூறினார்.
மேலும், தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது. என என்றாலும் மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டிய நிலை உள்ளது என கூறினார்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவைத்தலைவர் மதுசூதனன் தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறி தான் தேசிய கட்சிகள் பயணம் செய்ய முடியும் என பேசியது குறிப்பிடதக்கது.