எத்தனை தை பிறந்தாலும் திமுக வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 10, 2021 03:22 PM GMT
Report

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை

அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பரிசுத் தொகுப்பை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒவ்வொரு தை மாதம் பிறந்தவுடன் தங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமாக செல்லி வருகின்றார்.

ஆனால், எத்தனை தை பொங்கல் வந்தாலும் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் நல்வழி பிறக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார்.