தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச டேட்டா: முதல்வரின் அதிரடி உத்தரவு

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 10, 2021 03:11 PM GMT
Report

அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது.

எனவே கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, எல்காட் நிறுவனம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.