செல்லும் இடமெல்லாம் சிறப்பு.. மக்கள் மத்தியில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.!!

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 10, 2021 02:23 PM GMT
Report

மக்கள் மத்தியில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் மற்றும் இலவச பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

வெகு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டம் மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து நேரடியாக அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அதிமுக அரசு இதுவரை செயல்படுத்திய நல்ல திட்டங்கள் குறித்து பேசி ஓட்டு சேகரித்து வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மக்கள் கடல் போல் திரண்டு அமோக வரவேற்புடன் வரவேற்று ஆதரவளித்து வருகின்றனர். அவருடைய திட்டங்களுக்கு மனமார நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில்கூட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் தமிழக அரசை பாராட்டும் வகையில் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

விவசாயத் துறையில் இதுவரை இல்லாத மகசூல் பெறும் அளவிற்கு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். அத்திக்கடவு அவினாசி திட்டம், குடிமராமத்து பணி உள்ளிட்டவைகளின் மூலமாக விவசாயத் துறையில் புரட்சி படைத்துள்ளார்.

இதனால் அடுத்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அரசு மீண்டும் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.