சசிகலா விடுதலை ஆனப் பிறகு முதல்வருக்கு பெரிய ஆப்பு இருக்கு- உதயநிதி ஸ்டாலின்
சசிகலா விடுதலை ஆன பிறகு முதல்வருக்கு பெரிய ஆப்பு காத்திருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "முதல்வர் பழனிசாமி, படிப்படியாக முன்னேறியதாக கூறுகிறார்.
ஆனால், அவர் சசிகலாவின் காலில் விழுந்து கிடந்துதான் முதல்வரானார். சசிகலா வரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையானதும், முதல்வர் பழனிசாமிக்கு இரண்டு ஆப்பு உள்ளது. இதனால், சசிகலா காலில் மீண்டும் முதல்வர் பழனிசாமி விழுந்துவிடுவார். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளதாக விளம்பரம் செய்யப்படுகிறது.
இந்தியாவில், ஊழலில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. சாலை காண்ட்ராக்ட்டில் ரூ. 6,600 கோடி ஊழல் நடந்துள்ளது. தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் உள்ளது என பழனிசாமி கூறுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., தான் ஆட்சியில் உள்ளது என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்".
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.