முதல்வர் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 10, 2021 04:49 AM GMT
Report

முதலமைச்சர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், முதலமைச்சர் நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவது இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரியது என்பதால் உதயநிதி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.