தமிழகத்தை சீர்குலைக்க தீய சக்திகள் முயற்சி.! என்.ராம் பரபரப்பு குற்றச்சாட்டு
மத்திய அரசு அதிகாரத்தின் வழியாக தீய சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு வருவதாக இந்து பத்திரிக்கை குழு தலைவர் என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் விழா நடைபெற்றது .
உதகையில் நடைபெற்ற படுகர் சமுதாய மக்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய இந்து என்.ராம், மத்திய அரசின் அதிகாரத்தின் வழியாக தீயசக்திகளை தமிழகத்திற்குள் நுழைக்க பல்வேறு தந்திரங்களைக் மேற்கொண்டு வருகிறது.
ஆனால், அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை என்பதை ஒவ்வொரு குடிமகனும் உறுதி ஏற்கவேண்டும்.
அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை சீர்குலைக்க தீயசக்திகள் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்வதால், தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.