அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக, புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும்.
எனவே, தேர்தலை நடத்துவதற்கான வேலையில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த டிசம்பர் 20ம் தேதி அன்று கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 8.50 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சில பல காரணங்களால் இந்த கூட்டம் சுமார் 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.