அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். தமிழர் பண்டிகையான பொங்கலையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதன்படி ஜனவரி 14-இல் அவனியாபுரம், ஜனவரி 15-இல் பாலமேடு, ஜனவரி 16-இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அலங்காநல்லூரில் நடைபெறும் போட்டியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து தொடக்கிவைக்கவுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.