ரயில்கள் மூலம் கருணாநிதியின் குடும்பத்துக்கு சொத்து சேர்ந்தது எப்படி? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
ரயில் மூலம் சென்னை வந்த கருணாநிதியின் குடும்பத்தாருக்கு சொத்துகள் சேர்ந்தது எப்படி? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப்பியுள்ளார். ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் இக்கேள்வியை எழுப்பினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரச்சரத்தின் போது பேசிய முதலமைச்சர், ஊழல் குற்றசாட்டுகள் குறித்து பேசி வரும் ஸ்டாலினிடம் நேரில் விவாதிக்க அழைத்தால், நீதிமன்றத்தை காரணம் கூறி ஸ்டாலின் பின் வாங்குவதாக விமர்சனம் செய்தார்.
ஊழல் குறித்து ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். ((பைட்: ஊத்துக்குளி, திருப்பூர்)) வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார், ஸ்டாலின் குடும்பத்தார் 58பேர்களுக்கு சொத்துக்கள் உள்ளது)) கருணாநிதி சென்னைக்கு வந்த போது ரயிலில் வந்தாதாக குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தெரிவித்தார்.
((பைட்: ஊத்துக்குளி, திருப்பூர்)) ((கருணாநிதி திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்ததாக கண்ணதாசன் தெரிவிதுள்ளார்)) அ.தி.மு.கவை எந்நாளும் உடைக்க முடியாது என்றும், ஸ்டாலின் தி.மு.கவை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மு.க அழகிரி கட்சி ஆரம்பித்தால் தி.மு.க இரண்டாக பிரிந்துவிடும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.