செம்மர கடத்தலில் ஈடுபட்ட சசிகலா உறவினர் கைது

admk-election-dmk-tamilnadu
By Kanagasooriyam Jan 11, 2021 03:38 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக சசிகலா உறவினரின் மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் இளவரசியின் உறவி னர் பாஸ்கரனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்து உள்ளனர். சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக்.

ஜெயா தொலைக்காட்சியின் நிர் வாக இயக்குநராக இருக்கிறார். இவரது மாமனார் பாஸ்கரன் (55). சென்னை அண்ணா நகர் மேற்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வழக்கு பல இவர் மீது உள்ளன.

இதேபோல் வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கரன் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தியது தொடர் பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக பாஸ்கரனை கைது செய்ய ஆந்திர அதிரடிப் படை போலீஸார் முடிவு செய்தனர்.

அதனையடுத்து சென்னையில் உள்ள பாஸ்கரனின் வீட்டுக்கு நேற்று அதிகாலை போலீசார் வந்தனர். மேலும் அவரை கைது செய்வதற்கான வாரண்டை காட்டி அவரை கைது செய்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு அவரை அழைத்து சென்றனர்.