ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தந்தால் போதும் - எல்.முருகன்
தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிடம் தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்வாங்கியதால் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது அவரைப் பெரிதும் எதிர்பார்த்த பாஜகவும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, “தொகுதிகள் கேட்டு அதிமுகவுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அவர் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம்; அஞ்சல் துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும் ” என்றார்.