சசிகலா விடுதலை ஆனவுடன் அதிமுக நான்காக உடையும்.! மூத்த அரசியல்வாதி கணிப்பு

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 08, 2021 12:23 PM GMT
Report

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் விடுதலை அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இது பற்றி அனுமானித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுக வளர்கிறதோ இல்லையோ நான்காக உடைய வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை என்று முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விடுத்தார்.

மேலும், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக தலைதூக்கமுடியாது என்றும் அதற்கு நாங்கள் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.