பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுகவைச் சேர்ந்த மூவரை கைது செய்த சிபிஐad
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில் ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதிமுக இதனைத் தொடர்ந்து நிராகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இவர்கள் மூவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிபிஐ கைது மூவரையும் கட்சியிலிருந்து நீக்கி அதிமுக உத்தரவிட்டுள்ளது.